அழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம்
வாருங்கள் சேருங்கள் (2)
அழைக்கப்பட்டவர் அதிகம் அதிகம்
கீழ்ப்படிந்தவர் கொஞ்சம் கொஞ்சம் – அழைப்பின்
1.அறுப்பு மிகுதி ஊழியர் கொஞ்சம்
எஜமான் நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2)
தானியேல் போன்ற முழங்கால் தேவை
கண்ணீர் கலந்த ஜெபங்கள் தேவை – அழைப்பின்
2.எழுபது பேரை அழைத்த கர்த்தர்
உன்னையும் என்னையும் அழைக்கிறார் அன்றோ (2)
பர்னபா, பவுலைப் புறப்பட அழைத்தார்
அவர்களின் சபையை அனுப்பிட அழைத்தார் – அழைப்பின்
3.காற்றைக் கவனிப்பார் விதைப்பதும் இல்லை
மேகத்தைப் பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2)
வலைகளை எறியும் விசுவாசம் தேவை
சபைகளைக் கட்டும் தரிசனம் தேவை – அழைப்பின்
4.விளைந்த பயிர்களை அறுத்திடும் நேரம்
இணைந்து ஊழியர் உழைத்திடும் நேரம் (2)
இயேசுவின் வருகை நெருங்கிடும் நேரம்
உலகத்தின் முடிவு வந்திடும் நேரம் – அழைப்பின்
Azhaippin Sattham Thonikum Naeram Christian Song Lyrics in English
Azhaippin Sattham thonikkum neram
Varungal serungal-2
Azhaikkappattavar athigam athigam
Keezhpadinthavar koncham koncham
1.Aruppu miguthi oozhiyar koncham
Ejaman nammai jepikkave azhaikkiraar-2
Thaniyel pondra muzhangal thevai
Kanneer kalantha jepangal thevai
2.Ezhupathu perai azhaitha karthar
Unnaiyum ennaiyum azhaikkirar andro-2
Parnapa pavulai purappada azhaithar
Avargalin sapaiyai anuppida azhaithar
3.Katrai kavanippar vithaippathum illai
Megathai parppavar aruppathum illai-2
Valaigalai eriyum visuvasam thevai
Sapaigalai kattum tharisanam thevai
4.Vilaintha payirgalai aruthidum neram
Inainthu oozhiyar uzhaithidum neram-2
Yesuvin varugai nerungidum neram
Ulagathin mudivu vanthidum neram