Nandriyal Padiduvaen Song Lyrics | நன்றியால் பாடிடுவேன்

Nandriyal Padiduvaen Song Lyrics In Tamil
நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன் – 2

நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன் – 2

  1. கடந்திட்ட நாட்களில் உம் கரமே
    என்னை கிருபையால் நடத்தியதே
    கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
    கர்த்தாவே சுமந்திட்டீரே – 1

களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்றும்
கர்த்தா உம் அன்பினையே – 2

நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன் – 2

நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன் – 1

  1. நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
    உருக்கமாய் இரங்கினீரே
    சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
    புது வழி திறந்திட்டீரே – 1

ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே – 2
(நன்றியால்…)

  1. நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
    என்றென்றும் பாடிடுவேன்
    ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
    அவர் செய்த நன்மைகட்காய் – 1

ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன் – 2
(நன்றியால்…)

Nandriyaal Paadiduvaen Lyrics In English
I will sing with gratitude
I will sing each day – 2

Pondering over the good deeds
the Good Lord has done in my life
I will sing for eternity – 2

  1. In the bygone days, Your Hand
    has led me gracefully
    When bewilderment and fatigue encircled me,
    Lord, You carried me – 1

Joyfully, I will praise You continually
Of Your (Great) Love, O Lord – 2

  1. In my moments of distress, I cried out to You,
    and You responded with great compassion.
    Good (healthy) life sprouted within me
    For You have opened a new way – 1

Even if a thousand tongues sung praises,
It is incomparable to Your (Great) Love – 2

  1. You filled my mouth with goodness
    and I will sing (praises) forever
    O soul, you shalt give thanks
    For the good He had done – 1

Singing of Your Greatness throughout all of our days
And come to Your Feet (Presence) – 2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top